உத்திரப் பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நாளை நடைபெறுகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தொடர் தோல்விக்கு பொறுப்பு ஏற்கும் விதமாக காங்கிரஸ் கட்சிப் பொறுப்புகளில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி மட்டும் பிரியங்கா காந்தி ராஜினாமா செய்ய முன்வரலாம் என்று பிரபல ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய முன்வருவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு இது போன்ற காந்தி குடும்பத்தினர் ராஜினாமா செய்ய முன்வரும் போது காங்கிரஸ் காரியக் கமிட்டி நிர்வாகிகள் அதை நிராகரிப்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தங்களின் முழு ஆதரவு அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கட்சியில் சில மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று சில காரிய கமிட்டி உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கட்சியின் பொறுப்புகளிலிருந்து ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி விலக உள்ளதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. அதனால் நாளை நடக்கும் கூட்டம் அரசியல் களத்தில் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.