சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட்பிரபு ட்விட்டரில் அறிவித்திருந்தார். ஆனால் மாநாடு திரைப்படம் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்தார். இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. அதனால் திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் இன்று வெளியிடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மாநாடு திரைப்படம் எல்லா பிரச்சனைகளும் முடிந்து இன்று வெளியாகி உள்ளது. ஆனாலும் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப் பெறாததால் 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு சில திரையரங்குகளில் முதல் காட்சி 7 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் எட்டு மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.