பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ஆம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 200க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அந்தந்த மாவட்டத்திலேயே 100 கிலோ மீட்டருக்கு மிகாமல் தேர்வர்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்கான தேர்வை எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மையம் அமைக்க ஏதுவாக கல்லூரிகளை ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ஒதுக்கித் தருமாறு பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
Categories
JUST IN: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி உத்தரவு….!!!!
