கடந்த மாதம் ஆவடி பகுதியில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்ததையடுத்து அவர்களிடம் முதல்வர் முக ஸ்டாலின் தங்களது பகுதிக்கு நேரில் வருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு குடும்ப அட்டை, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் நரிக்குறவர் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் இட்லி, வடை சாப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.