தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மே 10ஆம் தேதி முதல் ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்த 3 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் புதிய அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து பொருட்களை தங்குதடையின்றி பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.