முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் ரவிச்சந்திரன். இந்த 25 ஆண்டு சிறை வாசத்திற்கு இடையே அவருக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, குடும்ப சொத்து பாகப்பிரிவினைக்காகவும், தனது தாயாரை பார்க்கவும் ஒரு மாதம் பரோல் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல் இருக்கின்றது? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
Categories
JUST IN: தமிழக அரசுக்கு ஒரு வார கால அவகாசம்… மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!!
