Categories
மாநில செய்திகள்

#JUST IN: தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் இனி…. போக்குவரத்துத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாகபயணிக்கலாம் என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இனி வரும் நாட்களில் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூல் செய்யப்படாது என்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அரசு பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருக்கை தேவை என்றால் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்ற தமிழக அரசு தற்போது தெரிவித்துள்ளது.மேலும் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

Categories

Tech |