தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அனைத்து கோவில்களிலும் மராமத்து பணிகளை விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிக பணியில் இருந்தவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.