நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிகவும் முக்கியமான ஆவணங்களில் ஒன்று. அதன்படி அனைத்து முக்கிய ஆவணங்களுடன் ஆதார் எண் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அவ்வப்போது மத்திய அரசு வெளியிட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இபிஎஃப் கணக்கு எண்ணுடன் ஆதார் இணைக்க வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி கடைசி நாள் என்று வருங்கால வைப்பு நிதியம் அறிவித்துள்ளது.
அதன்பிறகு ஆதார இணைக்காத சந்தாதாரர்கள் பணம் செலுத்தவும், எடுக்கவும், சலுகை பெறவும் முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்கள் அனைவரும் தங்களின் யுஏஎன் எனப்படும் ஒருங்கிணைந்த கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த அவகாசம் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.