Categories
சினிமா

#JUST IN: கொரோனாவில் இருந்து மீண்டார் நடிகை த்ரிஷா…. ட்விட்டரில் வெளியான தகவல்….!!!!

பிரபல நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது அவர் குணமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில், நெகட்டிவ் என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் சந்தோஷப்பட்டதே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக சந்தோசப்படுகிறேன். தான் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் தனது நன்றி என்றும் 2022ஆம் ஆண்டு சுறுசுறுப்பாக இயங்க நான் தயாராகி விட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Categories

Tech |