தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எப்போதும்போல ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளை செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின், கமல் உள்ளிட்டவர்கள் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஹர்பஜன் சிங் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவருடைய டுவிட்டர் பதிவில், “என் மார்பு மேல சூப்பர் ஸ்டார். 90’S பில்லாவும் நீங்கள்தான். 80’S பாட்ஷாவும் நீங்கள்தான். 2K அண்ணாத்த நீங்கள்தான். சினிமா பெட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா. அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.