ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்தனர். இதில் இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவருடைய மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த திடீர் மரணம் இந்தியாவையே உலுக்கும் செய்தியாக அமைந்தது. இந்த நிலையில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட இறந்த ராணுவ வீரர்களுக்கு இன்று காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் ராணுவ மரியாதை செலுத்தப்படுகிறது.