இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அந்தந்த நாட்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் இருந்து மர்ம பொட்டலங்களுடன் பஞ்சாபில் இந்திய எல்லைக்குள் பறந்து வந்த டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய கிராமமான தானோ கலன் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.