சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் இன்று காலை புறப்பட்டார், உடன் பரப்புரை வாகனமும் செல்கிறது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் ஒரு வாரகால சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்று சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலா, பசும்பொன் தேவர் குரு பூஜையில் பங்கேற்கின்றனர். நாளை டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்ப்பில் பங்கேற்கிறார். சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் 25 இடங்களில் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சசிகலா சந்திக்கிறார். அதிமுக கொடி பொருந்திய காரில் புறப்பட்ட அவரை ஆரத்தி எடுத்து தொண்டர்கள் வழியனுப்பி வைத்தனர்.
Categories
JUST IN: அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் சசிகலா…!!
