இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் தொடக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். இந்த திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
அதன் பிறகு பாலிசிதாரர் ஒருவேளை இறந்துவிட்டால் அவருடைய குடும்பத்தினருக்கு 2 லட்சம் காப்பீடு வழங்கப்படுவதோடு, பாலிசிதாரருக்கு உடல் உறுப்புகள் செயலிழந்தால் உடனடியாக 1 லட்ச ரூபாய் காப்பீடும் வழங்கப்படும். இதனையடுத்து 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் எல்ஐசி அலுவலகத்திற்கு காப்பீடு திட்டத்தை தொடங்கிக் கொள்ளலாம். மேலும் புதிய பாலிசியை தொடங்க செல்லும் நபர்கள் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி சேமிப்பு கணக்கு எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.