ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அரையிறுதிப் ஆட்டத்தில் இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.
12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா-ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இதற்கு முன் நடந்த காலிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்திய , இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது .இந்நிலையில் ஒடிசா அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையின் (DSYS) சமூக ஊடக குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து ஒடிசா விளையாட்டுத் துறை அதிகாரி கூறுகையில்,” இந்தப் போட்டியை கையாளும் சமூக ஊடக குழுவை சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் ஊடக மையத்தை பயன்படுத்தி வரும் அனைவருக்கும் RT-PCR பரிசோதனை நடத்தப்படும் “இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்நிலையில் சமூக ஊடக குழு உறுப்பினர் குழுவுக்கும் ,போட்டியில் விளையாடும் வீரர்களுக்கும் நேரடி தொடர்பு இல்லாததால் திட்டமிட்டபடி போட்டிகள் அனைத்தும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.