ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியின் நடந்த கால்இறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் பெல்ஜியம் அணி வீரர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.இதன்பிறகு இந்திய அணி வீரர்கள் சுதாரித்து விளையாடினர் . இதில் 21-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பில் வாய்ப்பில் இந்திய அணியில் சர்தானந்த் திவாரி கோல் அடித்தார்.
இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை .இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு லக்னோவில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நாளை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ,ஜெர்மனி அணியுடன் மோதுகிறது.