ஐசிசி 14 -வது ஜூனியர் உலக கோப்பை போட்டி வெஸ்ட் இண்டீஸில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா,வங்காளதேசம் இங்கிலாந்து ,தென் ஆப்பிரிக்கா உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ ‘ பிரிவில் வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாபிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா அணிகளும், ‘சி’ பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே அணிகளும் ,’டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் முதல் நாளான இன்று வெஸ்ட் இண்டீஸ் – ஆஸ்திரேலியா அணியும், ஸ்காட்லாந்து- இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் 15-ஆம் தேதி மோதுகிறது. இதில் டெல்லி பேட்ஸ்மேன் யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது .மேலும் இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் மனவ் பராக்கும் இடம் பெற்றுள்ளார் . மேலும் சமீபத்தில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி ,பயிற்சி போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் ,ஆஸ்திரேலியா அணிகளை துவம்சம் செய்வதால் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.