ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் சென்னை மக்களிடையே நிலவி வருகிறது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்முடங்கியிருக்கின்றன. இதற்கு முன் ஏப்ரல் 14 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக மே 3 வரை நீட்டிக்கப்பட்டது.
இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. எனவே மே 3க்கு பிறகும் நீட்டிக்கப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பேச உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், காய்கறி, மளிகை கடைகள், நடமாடும் காய்கறிகள் உள்ளிட்டவைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டில் ஜூன் 30 வரை தேதி அச்சிடப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற அச்சம் சென்னை மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.