Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலுக்கு… சாத்துக்குடி ஜூஸ்…!!

சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு

உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவர் பரிந்துரை செய்வது முதலில் சாத்துக்குடி ஜூசாக தான் இருக்கும். காரணம் உடலில் சோர்வை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாத்துக்குடி பெரிதும் உதவி புரிகிறது. விட்டமின் சி நிறைந்த சாத்துக்குடி பலத்தில் பொட்டாசியமும் பாஸ்பரசும் அதிகம் உள்ளது. இதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள்

  • உடல்நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்கள் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதனால் உடல் வலிமை பெற்று புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள்.
  • நினைவாற்றல் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. மறதி என்பது வந்து விட்டால் அதுவே கொடும் நோயாக மாறி உயிரை கொன்று விடும். நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி ஜூஸ் பெரும் பங்களிப்பை கொடுத்து வருகிறது.
  • சிறிய வேலை செய்தாலும் உடனடியாக உடல் சோர்வு அடைகிறது என்றால் சாத்துக்குடி ஜூஸ் குடித்து வருவது உடலுக்கு வலிமை கொடுக்கும். உடல் அசதி காணாமல்போகும்.
  • அதிகப்படியான மக்கள் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சாத்துக்குடியை தொடர்ந்து குடித்து வருவது சிறந்த மருந்தாக அமைகிறது.
  • தினமும் சாத்துக்குடி பழத்தை சாப்பிட்டு வருவதால் ஜீரண சக்தியை அதிகரித்து பசி ஏற்பட தூண்டும்.
  • சாத்துக்குடி பழத்தில் அளவுக்கு அதிகமான கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் ஆரோக்கியத்துடன் வளர்வார்கள்.
  • தினமும் காலை வெறும் வயிற்றில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதனால் உடல் எடை குறையும்.

Categories

Tech |