ரஷ்ய ஜனாதிபதி புடினும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் சந்திக்கும் பகுதியின் நுழைவுவாயிலில் சலசலப்பு ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் புடினும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள Villa La Grange-ல் இன்று சந்திக்க உள்ள நிலையில் சுமார் 5 மணி நேரம் மூன்று கட்டமாக இடைவெளியுடன் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்ய ஜனாதிபதி புடின் செய்தியாளர்களை தனியாக சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் செய்தியாளர்களை தனியாக சந்தித்து பேச உள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேச போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/i/status/1405136325171453955
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் இரு தலைவர்களும் சந்திக்கும் இடத்தில் கூட்டமாக குவிந்துள்ளனர். மேலும் இரு நாட்டு தலைவர்கள் சந்திக்கும் போது பிரத்தியேக காட்சிகளை ஒளிபரப்பவும், தலைவர்களை பேட்டி எடுக்கவும் சர்வதேச ஊடகங்கள் ஒளிப்பதிவாளர்களையும், பத்திரிகையாளர்களையும் களமிறக்கியுள்ளது. இரு தலைவர்களும் சந்திக்க உள்ள அந்த இடத்தின் நுழைவு வாயிலுக்கு முன் பத்திரிகையாளர்கள் கேமரா மைக்குகளுடன் குவிந்துள்ளதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.