Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தரிசனம் காண கண் கோடி வேண்டும்… நிலை கண்ணாடிக்குள் ஜோதி…. திரண்ட ஏராளமான பக்தர்கள்…!!

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவையொட்டி ஜோதி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனால் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பதற்காக திரளான பக்தர்கள் அங்கு குவிந்து விட்டனர். இந்நிலையில் காலை 6 மணிக்கு சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றுள்ளது. அப்போது ஞான சபையின் நிலை கண்ணாடிக்கு முன்பு சிவப்பு, பொன் நிறம், கருப்பு, பச்சை, நீலம், வெள்ளை, கலப்பு வண்ணத்திரை போன்ற ஏழு வண்ணத் திரைகள் இருந்தன. இதனையடுத்து அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலைக்கண்ணாடிகுள் இருக்கும் ஜோதியை பார்ப்பதே, ஜோதி தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் காலை 6 மணிக்கு ஜோதி தரிசனத்தை காண வந்த திரளான பக்தர்கள் நிலைக்கண்ணாடி முன் காணப்பட்ட ஏழு திரைகளையும் விலக்கி, நிலை கண்ணாடிக்குப் பின் வள்ளலார் ஏற்றி வைத்த தீபத்தை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் “அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” என்ற மந்திரத்தை தனது வாயால் உச்சரித்த படியே ஜோதியை தரிசனம் செய்துள்ளனர். ஆனால் ஊரடங்கு விதிமுறையின் படி அங்கு அன்னதானம் வழங்கவும், கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் எந்த ஒரு அனுமதியும் வழங்கப்படாததால் பக்தர்களின் வருகை என்பது சற்று குறைவாகவே காணப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5:30 மணி என தொடர்ந்து ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

Categories

Tech |