இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இங்கிலாந்து -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது,” கடந்த சில போட்டிகளில் இங்கிலாந்து அணி தோல்வியின் எதிரொலியால் கேப்டன் ஜோ ரூட் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளார் .இதனால் இந்நேரத்தில் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டால் இங்கிலாந்து அணி வெற்றிபெற முடியும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.