பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச் கலந்துகொள்வதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் தான் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கலந்துகொள்ள முடியும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. எனவே, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதை எதிர்க்கும் டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இதற்கு முன்பே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்தார். எனவே, ஆஸ்திரேலிய நாட்டின் நீதிமன்றம், அவரை நாட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவிட்டது. அதன்படி, ஜோக்கோவிச் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.