Categories
பல்சுவை

எனக்கு சுயமரியாதைதான் முக்கியம்…. எவ்வளோ கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்…. மறுப்பு தெரிவித்த பிரபல நடிகர்….!!

பிரபல ஹாலிவூட் நடிகரான ஜானி டெப் மற்றும் நடிகையான ஆம்பர் ஹர்ட் இருவரும் கடந்த 2009ஆம் ஆண்டு தங்களது காதலை வெளிப்படுத்தி பிறகு 2015ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து திருமணமான ஒரு வருடத்திலேயே அதாவது 2016 ஆம் ஆண்டு ஆம்பர் ஹர்ட் தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூற 2017ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து கிடைத்தும் விட்டது. இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஆம்பர் ஹர்ட் ஆப்பேட்ல் ஒரு ஆர்டிகல் எழுதினார்.

அதில் DOMESTIC VIOLENCEக்கு தான் உட்படுத்தபட்டதாகவும் அதிலிருந்து வெளியே வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்ட தாகவும் அவர் எழுதியிருந்தார். இது நேரடியாக ஜானி டெப்பின் பெயரை கூறாவிட்டாலும் பார்ப்பவர்கள் அனைவருக்குமே  இவர் ஜானி டெப்பை தான் கூறுகிறார் என்று தெரியும். இதனால்தான் ஆம்பர் ஹரி தனது திருமண வாழ்க்கையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார் என்று அனைவரும் கூற ஆரம்பித்தார்கள்.

அதன்பின் ஜானி டெப்பை பற்றி பல அவதூறுகள் வெளிவர தொடங்கியதோடு மட்டுமல்லாமல் சினிமா துறையில் இருக்கும் பலரும் ஜானி டெப்யிடம் இருந்து விலக ஆரம்பித்தார்கள். அதோட தாக்கத்தில் தான் இவருக்கு பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்திற்கு கிடைத்த வாய்ப்பு பறிபோகும் நிலையில் இருந்துள்ளது. இதனால் ஜானி டெப் ஆம்பர் ஹர்ட்டுக்கு எதிராக அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது “ஆம்பர் ஹர்ட் எழுதிய ஆர்டிக்கலினால் என்னுடைய எதிர்காலமே வீணாகிவிட்டது. அதற்கு நஷ்ட ஈடாக 50 மில்லியன் டாலர் தர வேண்டும்” என்று ஜானி டெப் கூறியிருந்தார். அதற்கு ஆம்பர் ஹர்ட் “உங்களால் தான் என்னுடைய வாழ்க்கை போய்விட்டது. நீங்கள்தான் எனக்கு 100 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக தர வேண்டும்” என்று கூறி ஜானி டெப்பின் மேல் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்குகள் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இதில் ஜானி டெப்பிற்கு தான் அதிகமான ரசிகர்கள் தங்களது ஆதரவை குவித்து வருகின்றனர். காரணம் அவர் மேல் எந்தவித குற்றமும் இல்லாததே ஆகும். மேலும் “we support jack sparrow” “we stand by johny tef” போன்ற #TAGகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த சமயத்தில் நீதிமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது ஆம்பர் ஹர்ட் தரப்பின் வக்கீல் ஒருவர் ஜானி டெப்பிடம் “ஆம்பர் ஹர்ட் எழுதிய ஆர்டிகலால் தான் உங்களுடைய சினிமா எதிர்காலம் வீணாகிவிட்டது என்று கூறுகிறீர்கள்.

ஆனால் அதற்கு முன்பாகவே உங்களைப் பற்றி நிறைய அவதூறுகள் வந்து கொண்டேதான் இருந்திருக்கிறது. இதனால்தான் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற திரைப்படத்தின் வாய்ப்பு உங்களுக்கு பறிபோனது என்று கூறுகிறீர்களா? இதற்கு பின்பு அவர்கள் உங்களை கூப்பிட்டு நடிக்க சொன்னால் நடிக்க மாட்டீர்களா? கூடுதலாக 300 மில்லியன் டாலர் சம்பளமாக தருவதாக கூறினாலுமா? என்று கேட்டார். அதற்கு ஜானி டெப் “இல்லை நான் நடிக்க மாட்டேன்.

ஏனென்றால் இதனைபோன்ற வழக்கு என்மேல் போடப்பட்டவுடன் என் பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று என்னிடம் கேட்காமலேயே பாதுகாப்பிற்காக என்னுடைய தொடர்பை துண்டித்து கொள்ள disney விரும்பினார்கள். அப்படி இருக்கையில் நான் எப்படி திரும்பவும் என்னுடைய சுயமரியாதையை விட்டுவிட்டு நடிக்க முடியும். மேலும் இந்தப் படத்தினுடைய ஆறாம் பாகத்தை நான் சிறந்த goodbye உடன் முடிக்க விரும்பினேன். ஆனால் அதற்குள்ளாக இப்படி நடந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |