Categories
உலக செய்திகள்

“ஜான்சன் அண்ட் ஜான்சன்” புற்றுநோய் புகார்….. நிராகரித்து தீர்ப்பளித்த அமெரிக்கா நீதிமன்றம்….!!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தை பவுடரை பயன்படுத்தியதால் புற்றுநோயை ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் முகப்பூச்சு பவுடரை பயன்படுத்தியதால் புற்று நோய் ஏற்பட்டதாக விக்கி பாரஸ்ட் என்பவர் லூயிஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விடுத்திருந்த அறிக்கையில்,

விக்கி பாரஸ்ட் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட புற்று நோய்க்கு நிறுவனத்தின் முகப்பவுடர் காரணமல்ல என்று  கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவனம் முகப்பவுடர் பாதுகாப்பானது என்பதையும் புற்று நோயை ஏற்படுத்தாது என்பதையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பின் இதனை ஆராய்ந்த நீதிபதிகள் ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |