Categories
உலக செய்திகள்

பதிலடி கொடுக்கும் ஜோ பைடன்…பிரபல நாட்டின் மீது குண்டு மழை…அதிகரிக்கும் உயிர்பலி…!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவின் படி சிரியாவில் பதிலடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற போராளிகளின் தளங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலானது சமீபத்தில் நடந்த ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதலானது ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்பேரில் நடத்தப்பட்டது.மேலும் அமெரிக்க ராணுவ படைகள் சிரியாவில் உள்ள குழுக்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆயுதங்கள் கொண்ட மூன்று லாரிகள் அளிக்கப்பட்டது. இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |