Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது…. மீண்டும் அங்கு செல்வேன்… -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக கூறியிருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. எனினும், அமெரிக்கா எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து தான் கச்சா எண்ணையை வாங்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்ததாவது, அமெரிக்கா இந்திய நாட்டிற்காக எப்போதும் இருக்கும். ஆனால், அமெரிக்காவிற்கு முன்பே பல காலங்களாக இந்தியா-ரஷ்யா நல்ல உறவில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும், இந்தியாவுடனான உறவு குறித்து ஜோ பைடன் கூறியதாவது, ஏற்கனவே 2 தடவை இந்தியாவிற்கு சென்றிருக்கிறேன். மீண்டும் செல்வேன். அந்நாட்டுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |