இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாடுகளையும் எளிதில் ஆன்லைன் முறையில் பெற்று விடுகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாக பல்வேறு வங்கிகள் பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதே சமயம் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஆன்லைன் மோசடிதாரர்கள் குறிவைத்து தாக்க தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாக அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஈமெயில் அனுப்பப்படுகின்றது. பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்தால் உங்களின் தரவுகள் அனைத்தும் திருடப்பட்டு விடும். எனவே இது போன்ற லிங்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது