Categories
சினிமா தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ 25,00,000…. பேச்சு மட்டுமல்ல….. உதவியும் செய்வோம்…. கெத்து காட்டும் ஜோதிகா ரசிகர்கள்….!!

தஞ்சை மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா நன்கொடை வழங்கியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பாக தஞ்சையில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா பொதுமக்கள் கோவில்களுக்கு செலவு செய்வதை போலவே பள்ளிக்கூடங்களுக்கும், தரமான மருத்துவமனைகளை கட்டமைப்பதற்கும் செலவு செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பல இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிராக பல கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

தற்போது எந்தவித உரிய வசதியின்றி இருந்த தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்க ரூபாய் 25 லட்சம் நன்கொடையை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடிகை ஜோதிகா வழங்கினார். முன்னதாக விருது வழங்கும் விழாவில், மருத்துவமனைக்கும் தானம் செய்யுங்கள் என அவர் பேசியதோடு மட்டுமல்லாமல் செயலிலும் செய்து காட்டியுள்ளார்.

எனவே வீண் பேச்சு பேசி பிறரை மட்டம் தட்ட நினைக்காமல், ஜோதிகாவை போல் பேச்சோடு இல்லாமல் நல்ல காரியங்கள் செய்து மற்றவர்களுக்கு பயனுள்ளவர்களாக வாழ்ந்து காட்டுங்கள் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |