நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலை முன்னிட்டு டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்தநிலையில் ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு விநாயகசதுர்த்தி வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த நாளில் எல்லா தடைகளையும் கடந்து, இது ஒரு புதிய தொடக்கமாக இருக்க வேண்டும்” இவ்வாறு தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.