Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ், பாஜக மாணவர் அமைப்புகளுக்கிடையே மோதல்!

ஜே.என்.யூ. தாக்குதலைத் தொடர்ந்து, பாஜக மாணவர் அமைப்பு, காங்கிரஸ் மாணவர் அமைப்பு ஆகியவைக்கு இடையே குஜராத்தில் மோதல் வெடித்துள்ளது.

ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் (ஏ.பி.வி.பி.) சேர்ந்தவர்களுக்கும் காங்கிரஸ் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்க உறுப்பினர்களுக்கும் மோதல் வெடித்துள்ளது.

Image

முன்னதாக, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் ஜே.என்.யூ. தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் ஏ.பி.வி.பி. எனக் குற்றஞ்சாட்டி அக்கட்சி அலுவலகத்திற்கு அருகே போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதில், இந்திய தேசிய மாணவர் சங்கத் தலைவர் நிகில் சாவானாவுக்கு படுகாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |