Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’… ரஜினி குறித்து விமர்சனம்…. சர்ச்சை காட்சிகள் நீக்கம்….!!!

ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படத்தில் இருக்கும் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்று சர்ச்சையான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனை கண்ட தணிக்கைக் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இப்படத்திற்கு சான்றிதழ் அளிக்கவும் மறுத்துள்ளனர். மேலும் மீண்டும் மறு தணிக்கைக்கு அடங்காதே திரைப்படத்தினை படக்குழு கொண்டு சென்றனர். அதிலும் ரஜினியின் அரசியலை கேலி செய்வது போன்ற காட்சிகள் இருந்துள்ளது.

எனவே அதனை நீக்க வேண்டும் என்று படக்குழுவினர் வற்புறுத்தியுள்ளனர். தணிக்கை குழு படக்குழு சொன்ன விளக்கத்தை ஏற்காமல் சர்ச்சை காட்சிகளை வெட்டி நீக்கியுள்ளனர். இதை தொடர்ந்து அடங்காதே திரைப் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

Categories

Tech |