Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களா நீங்கள்…. இதோ உங்களுக்கான சூப்பர் திட்டம் அறிமுகம்…. என்னனு பாருங்க….!!!

ஜியோ நிறுவனமானது தனது வடிகையாளர்களுக்கு புதிதாக புதிய prepaid recharge திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிக குறைந்த காலகட்டத்தில் ஜியோ நிறுவனமானது அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆஃபர்களையும் வழங்கி உள்ளது. இதனால் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன. மேலும் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவின் ஆஃபர்கள் பார்த்து ஜியோவுக்கு மாறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜியோ நிறுவனம் புதிதாக ரூபாய் 259 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த திட்டம் ஒரு மாதம் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் கூறியுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது 28 நாட்கள் செல்லுபடியாகும் பிரிபேயிட் ரீசார்ஜ் திட்டத்தை 30 நாட்கள் நீடிக்க வேண்டும். இந்த 30 நாட்கள் திட்டத்தின் விவரங்களை 6௦ நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்று கூறியிருந்தது.

அந்த வகையில்  ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள 1 மாதா காலகட்ட திட்டத்தின் விலை ரூபாய் 259 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 1 1/2 ஜிபி டேட்டாவை வழங்கும். மேலும் உங்கள் தினசரி நெட்வொர்க் வரம்பை அடைந்தாள் 64Kbps வேகத்தின் மூலம் இணையதளத்தை பயன்படுத்தலாம் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ் வீதம் வழங்கப்படும். இந்த திட்டத்தை எத்தனை தடவை வேணாலும் ரீசார்ஜ் செய்யலாம். என்னவென்றால் இன்று மார்ச் 29ஆம் தேதி சார்ஜ் செய்தால் அடுத்த மாதம் 28ஆம் தேதி வரை இந்த திட்டம் செல்லுபடியாகும். மேலும் ஒன்றுக்கு அதிகமான முறையில் நீங்கள் ரீசார்ஜ் செய்து இருந்தாள் தானாவே RENEW ஆகிவிடும். ஒரு மாதம் வேலிடிட்டி விரும்புவர்களுக்கு இந்த திட்டம் சரியான தீர்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |