Categories
தேசிய செய்திகள்

Jio, Airtel & Vi பயனர்களுக்கு…. ரூ.500க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்…. இதோ முழு விபரம்….!!!!

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்றவை தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளுடன்கூடிய சில ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அந்த அடிப்படையில் இந்த நிறுவனங்களில் ரூபாய் 500-க்கு கீழுள்ள சில ரீசார்ஜ் திட்டங்கள் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதன்படி இத்திட்டங்கள் 2 மாதங்களுக்கு செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. அதாவது ஜியோவின் ரூபாய் 479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வருகிறது. இதன் கீழ் ஒருவர் தினமும் 1.5ஜிபி டேட்டாவைப் பெறலாம்.

அந்த வகையில் பயனாளர்கள் மாதாந்திர அடிப்படையில் மொத்தம் 84 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதையடுத்து ஜியோவின் ரூபாய் 479 ப்ரீபெய்ட் திட்டம் 56 தினங்களுக்கு செல்லுபடியாகும் விதமாக தினசரி 2 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த பேக்கில் Jio TV ஆப்ஸ் மற்றும் Jio Cinema செயலிக்கான இலவச அணுகலும் அடங்கும். அதன்பின் ஏர்டெல்லும் இதே போன்ற திட்டத்தை வழங்குகிறது. எனினும் ரிலையன்ஸ் ஜியோவைவிட அதிகமான நன்மைகள் இதில் கிடைக்கும். அதன்படி ரூபாய் 479 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூபாய் 100 கேஷ்பேக் இதில் வழங்கப்படுகிறது.

இதனுடன் அப்பல்லோவுக்கு 3 மாதங்கள் இலவச அணுகலையும் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். இதை தவிர்த்து மற்ற பலன்களில் Wynk Music ஆப்ஸ் மற்றும் HelloTunesக்கான இலவச அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இத்திட்டம் 56 தினங்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இறுதியாக வோடபோனின் ரீசார்ஜ் திட்டமானது சற்று வித்தியாசமான நன்மைகளுடன் ரூபாய் 479 ப்ரீபெய்ட் பேக்கை கொண்டுள்ளது. இந்த திட்டம் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 56 தினங்கள் செல்லுபடியாகும் காலத்துடன் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் வருகிறது. மேலும் 12:00AM முதல் 6:00AM வரை வரம்புகள் இன்றி இலவச இரவு டேட்டாவையும் இவற்றில் பெறலாம்.

Categories

Tech |