Categories
தேசிய செய்திகள்

JIO-க்கு போட்டி….. மிக குறைந்த விலையில்….. AIRTEL-இன் புதிய திட்டம்….!!

jio க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் மிகப்பெரிய போட்டி நிறுவனங்களாக கருதப்படுபவை ஒன்று Airtel மற்றொன்று ஜியோ ஆகியவைதான். ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல்கட்டமாக அன்லிமிடட் இன்டர்நெட் சேவைகளை இலவசமாக வழங்கி பின் தற்போது மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இன்டர்நெட் சேவை மிக குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஜியோ என்றே கூறலாம்.

ஜியோ கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு பிறகே ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவைக்காக அளித்த கட்டணங்கள் குறைக்கப்பட்டன. தற்போது ஜியோ டிஜிட்டல் உலகில் மற்றொரு புரட்சியை ஏற்படுத்தும் விதமாக மிக குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஜியோ-க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் புதிய குறைந்த விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஸ்மார்ட்போன் கம்பெனிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடைய விலை ரூபாய் 4000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |