சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், அதிபராக பொறுப்பேற்ற பின்பு முதல் தடவையாக திபெத்திற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2011 ஆம் வருடத்தில் நாட்டின் துணை அதிபராக இருந்த சமயத்தில் திபெத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின்பு சீன நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற பின்பு தற்போது தான் முதல் தடவையாக அங்கு சென்றிருக்கிறார். நாட்டில் திபெத் நகர் சர்ச்சை மிகுந்த பகுதியாக தான் பல வருடங்களாக உள்ளது.
திபெத் அரசு தங்களை தனி ஆட்சி பகுதி என்று அறிவித்து விட்டது. எனினும் சீன அரசு அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. திபெத் பழமையான பௌத்த மத வரலாற்றை கொண்டது. ஆனால் சீன அரசு அவர்களது கலாச்சாரத்தையும் மதத்தையும் அங்கு திணிப்பதாக திபெத் மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
மேலும் திபெத் நாட்டின் எல்லையை பகிரும் இந்திய எல்லையிலும் கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் சீன நாடுகளின் ராணுவ வீரர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிபர், திபெத் பகுதிக்கு சென்றிருப்பது, முக்கியமாக பார்க்கப்படுகிறது.