ஜி 20 உச்சி மாநாட்டில் “இது போருக்கான காலம் அல்ல” என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் ஜீ 20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியுள்ளது. இந்த ஜீ20 உச்சி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட ஜீ 20 அமைப்பில் உறுப்பினர்களாகவுள்ள பல்வேறு நாடுகளை சேர்த்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போர் மற்றும் அதனால் உலகளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் போன்ற உலகளவிய சவால்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்ட அறிக்கைக்கு ஜீ20 நாடுகளின் பெரும்பாலான தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உலகளவில் எரிசக்தி, உணவு மற்றும் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பே உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இருப்பினும் ரஷ்யாவிற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க இன்னும் சில நாடுகள் தயக்கத்துடன் உள்ளனர். மேலும் இந்த அறிக்கையில் பிரதம மோடி கூறியதாவது, ” இது போருக்கான காலம் அல்ல. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தெரிவித்துள்ள கருத்தும் இதில் இடம் பெற்றுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.