பெண்ணிடம் 3 பவுன் தங்க செயினை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலுப்பைகுளம் கிராமத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வசந்தா அவரின் உறவினரான முனியாண்டி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் விதைநெல் வாங்குவதற்காக காரியாபட்டி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் வசந்தா அனிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர். இது குறித்து வசந்தா காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.