ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் சங்கரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்யாணி என்ற மனைவி இருக்கிறார். இவர் பேருந்தில் பந்தல்குடி பகுதிக்கு பயணம் செய்துள்ளார்.
அதன் பிறகு பந்தல்குடியில் இறங்கி பார்த்த போது கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து கல்யாணி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.