வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய் – மகளின் செயினை பறித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆனந்தல் கிராமத்தில் காந்தம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி என்ற மகள் உள்ளார். கடந்த செப்டம்பர் 30 – ஆம் தேதியன்று காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் காந்தம்மாள் மற்றும் கஸ்தூரி அணிந்திருந்த செயினை நைசாக பறித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதன் பிறகு மறுநாள் காலையில் இருவரும் தங்களது கழுத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து காந்தம்மாள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.