நகை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெற்றிலைமுருகன் பட்டி கிராமத்தில் முத்துச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகின்றார். இதனை அடுத்து முத்துச்செல்வி தனது பணிகாக அரசு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அழகுராஜா என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அதன் பிறகு முத்துச்செல்வி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயினை அழகுராஜா பறித்து விட்டு வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார். இதுகுறித்து முத்துசெல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகு ராஜாவிடம் இருந்த 5 பவுன் செயினை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகுராஜாவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.