Categories
உலக செய்திகள்

தற்காலிக வசிப்பிட விசா…. அகதிகளுக்கு வழங்கிய ஜெர்மனி அரசு…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளார்….!!

ஆப்கானிய அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட அனுமதி வழங்குவதாக அந்நாட்டு அரசு கடந்த புதன்கிழமை அன்று அறிவித்துள்ளது. இதன்படி 2600 ஆப்கானியர்களுக்கு வசிப்பிட விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விசா பட்டியலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கியமான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்தப் பட்டியலில் மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், கலைஞர்கள் விஞ்ஞானிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் போன்றோர் உள்ளனர்.

குறிப்பாக தலீபான்கள் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன்பாக ஜெர்மன் நிறுவனங்கள் மற்றும் அவற்றிற்காக வேலை செய்த ஆப்கானியர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். அதிலும் ஜெர்மன் அரசாங்க விதிகளின் படி வசிப்பிட அனுமதியானது மூன்று வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். இது அகதிகளின் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்கும் வழங்கப்படும். ஏற்கனவே அனுமதி பெற்றவர்கள் ஜெர்மனி அரசிடம் அடைக்கலம் பெற விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக வசிப்பிட அனுமதி பெற்றவர்கள் பாதுகாப்பு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |