Categories
உலக செய்திகள்

“பொது முடக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் ஜெர்மன்”… ஏஞ்சலா மெர்க்கலிடம் கை வசமிருக்கும் முக்கிய திட்டம்…!!

ஜெர்மனியில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை மூன்று கட்டங்களாக குறைப்பது குறித்து சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டமொன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில்  கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் இன்னும் முடிவடையவில்லை. எனவே ஜெர்மனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டமொன்றை கையில் எடுத்துள்ளார். அதில் முதல் கட்டமாக, பொது இடங்களில் எத்தனை பேர் ஒன்று கூடலாம் என்றும், இரண்டாவது கட்டமாக பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவை திறப்பது குறித்தும், மூன்றாவது கட்டமாக விளையாட்டு,உணவகம்,கலாச்சாரம் போன்றவை  குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்கட்ட பொதுமுடக்க தளர்வுக்கு பின் இரண்டு வாரங்கள் காத்திருக்க  வேண்டும் . அப்போது கொரோனா பரவலின் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை பொருத்து இரண்டாவது கட்ட தளர்வு மேற்கொள்ளப்படும் என்று ஏஞ்சலா மெர்கல் கூறியிருந்தார். ஜெர்மனியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும்  கொரோனா பரவல் அதிகரித்து தான் வருகிறது. நேற்றைய  நிலவரப்படி ஒரு நாளில் மட்டும் 4369 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |