Categories
உலக செய்திகள்

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தல்…. சமூக ஜனநாயக கட்சி வெற்றி…. வெளிவந்த தகவல்….!!

ஆட்சி அமைப்பதற்கு எங்களுக்கு ஆதரவு கிடைத்து இருப்பதாக சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் கடந்த 16 வருடங்களாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 வருடங்களாக பிரதமராக இருந்துள்ளார். இந்நிலையில் தற்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் ஏஞ்சலா மெர்கல் போட்டியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பதில் அந்நாட்டு கிறிஸ்தவ ஜனநாயகம் யூனியன் கட்சியின் சார்பாக ஆர்மின் லஷெட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய இடதுசாரிக் கட்சியான அந்நாட்டு சமூக ஜனநாயக கட்சியின் சார்பாக ஒலாப் ஷோல்ட்ஸ் போட்டியிட்டார்.

இதனைதொடர்ந்து நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக தொடங்கியது. இவற்றில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியை சிறிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி, சமூக ஜனநாயக கட்சியானது வெற்றி வாய்ப்பை பெற்றுள்ளது. இதுவரையிலும் வெளியான தகவலின்படி சமூக ஜனநாயகம் கட்சியானது 29.5 சதவீதம் வாக்குகளை வாங்கி வெற்றி வாய்ப்பை பெற்றது. அதன்பின்  கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. எனவே இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனாலும் ஆட்சியமைக்க எங்களுக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளதாக அந்நாட்டு சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப்  ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |