Categories
உலக செய்திகள்

‘விரைவில் முடிவு பெறும்’…. கொரோனா வைரஸ் பரவல்…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்….!!

கொரோனா வைரஸ் பரவலானது விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் அடுத்த ஆண்டு இளவேனில் பருவத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முடிவுக்கு வந்துவிடும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn  கூறியுள்ளார். அதிலும் தடுப்பூசியால் தடுக்க இயலாத ஒரு திடீர் மாறுபாடு அடைந்த புதிய வைரஸானது உருவாகாத வரை இதனை நாம் எளிதாக கையாண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக எந்த தொற்றானாலும் நெடுங்காலமாக இருக்குமாயின் அதன் வீரியம் குறைந்து மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடும்.

Live Talk with German Health Minister Jens Spahn - Technical University of  Munich - School of Management

ஆனால் அது வைரஸ் பரவல் காரணமாக உருவாகுமா அல்லது தடுப்பூசியினால் சாத்தியமா என்பது குறித்து தெரியவில்லை. இந்த இலக்கை அடைவதற்கு சாத்தியமான நிகழ்ச்சிகள் தடுப்பூசியில் உள்ளதாகவே கூறப்படுகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனே போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Categories

Tech |