Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியாவின் அடுத்த தலைவரே! ஊர் முழுவதும் போஸ்டர்…. அசத்திய தமிழக FANS….!!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை ஆதரித்து தமிழகத்தின் மதுரை பகுதியில் சுவர் விளம்பரங்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.

ஆந்திராவின் முதல்வராக சிறப்பாக பணியாற்றி வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சில ஆதரவாளர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஏனென்றால் அவரது செயல்கள் அத்தனை சிறப்பானதாக இருக்கும். கொரோனா  பாதிப்பில் கூட மற்ற மாநிலங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பை  கட்டுப்படுத்துவதை காட்டும் நோக்கமாக கொள்ளாமல் தங்களது மக்களையும் கருத்தில் கொண்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

சாதாரண உழைக்கும் மக்களுக்காக ஆட்சி நடத்தும் இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில், மதுரையில் இன்று  ஜெகன்மோகன் ரெட்டியை ஆதரித்து சுவர் விளம்பரங்கள் தற்போது தோன்றியுள்ளன. ஆங்காங்கே ஒட்டப்பட்டிருக்கும் அந்த விளம்பரத்தில், இந்தியாவின் மிகச் சிறந்த தலைவர். இந்தியாவின் அடுத்த தலைவர் போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

Categories

Tech |