பாஜகவின் அடுத்த தலைவராக அமைச்சரவையில் இடம் கிடைக்காத ஜெயப் பிரகாஷ் நட்டா தேர்வு செய்யபட இருப்பது உறுதியாகியுள்ளது.
நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக ஆட்சி பிடித்தது . நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது அமைச்சராக பொறுப்ற்றுள்ளார். இந்நிலையில் பாஜகவின் அடுத்த தி கலைவர் யார் என்று அமித்ஷா தேர்தலில் போட்டியிட்ட போதே எழுந்த கேள்விக்கு தற்போது உறுதியான பதில் கிடைத்துள்ளது.
பாஜகவின் ஜெயப் பிரகாஷ் நட்டா என்ற ஜேபி நட்டா இவர் தான் அடுத்த தலைவர் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆட்சியின் இவர் வகித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையில் இடமும் கிடைக்க வில்லை. இமாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட நட்டாவுக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாமல் இருப்பது இவர் தான் அடுத்த தலைவர் என்பதை உணர்த்துகின்றது.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலையோ அல்லது நாளையோ அறிவிக்கப்படலாம் என்று பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.