ஜெயலலிதா தைரியமாக முடிவெடுக்கக் கூடியவர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டபேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் தேனியை தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் ஜெயலலிதா மிகவும் தைரியமாக முடிவு எடுக்க கூடியவர். அவரின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.