Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஜப்பானின் பறக்கும் கார் 2030-ல் அறிமுகம்….!!!!

ஜப்பானின் NEC நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் 2030ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில்  ஜப்பானின் பிரபல நிறுவனமான NEC ஆட்டோ மொபைல் நிறுவனம் பறக்கும் காரை தயாரித்து அதனை சோதனை செய்தது. நான்கு ப்ரோபைல்லர்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Image result for japan nec flying car

நின்ற நிலையிலும் ஓடு தளத்திலும் இந்த வாகனத்தை இயக்க முடியும். முழு அளவிலான சோதனை ஓட்டங்களை முடித்த பின்னர் வரும் 2030ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என NEC நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |